மழலை குரலை ரசித்துக் கேட்ட கமல்.. "கூடவே ஒரு சர்ப்ரைஸ்.." இணையத்தில் Viral ஆகும் வீடியோஸ்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள், பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில், விஜய் டிவி மூலம் பெரிய அளவில் தமிழக மக்களின் இதயத்தில் இடம்பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்று, சூப்பர் சிங்கர்.

Kamalhaasan in super singer junior 8 children songs viral

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு என தனித்தனியாக நிறைய சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தங்களின் குரலால் பல பிரபலங்களை ஈர்த்து, நிறைய திரைப்படங்களிலும் பாடல்கள் பாடி வருகின்றனர்.

மழலைகளின் இனிய குரல்கள்

அந்த வகையில், தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. வழக்கம் போல, இந்த முறையும் நிறைய குழந்தைகள் தங்களின் இனிய குரலால், நடுவர்களையும் மக்களையும் கட்டிப் போட்டு வருகின்றனர். இதில், குழந்தைகள் பாடும் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆவது போல, தொகுப்பாளர்களாக வரும் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா ஆகியோர் செய்யும் காமெடிகளும் பெரிய அளவில் வரவேற்பை பெறும்.

Kamalhaasan in super singer junior 8 children songs viral

சிறப்பு விருந்தினராக கமல்

இதனிடையே, சமீபத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில், நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில், கமல் பேசி இருந்த பல விஷயங்கள், அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தது. அதே போல, குழந்தைகளுடனும் மிகவும் ஜாலியாக மழலை கொஞ்சும் அழகில் பேசி இருந்தார் கமல்.

பாடுற அழக பாக்கணுமே..

மேலும், கமல் முன்பு பாடிய குழந்தைகள் அனைவரும் அவரின் படத்தில் வரும் பாடல்களை தான் பாடி இருந்தனர். இந்நிலையில், குழந்தைகள் மிக அசத்தலாக பாடி இருந்த கமல் பாடல்கள் அனைத்தும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. 'இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்', 'Who's the hero', 'உன்னை விட இந்த உலகத்தில்' உள்ளிட்ட பல பாடல்களை, குழந்தைகள் அனைவரும் மிக அசத்தலாக பாட, அத்தனை பாடல்களையும் கமல் ரசித்து பார்த்துக் கொண்டிருந்ததை காண முடிந்தது.

அதே போல, சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், கமலுடன் இணைந்து பாடி இருந்த பாடலும், அதிகம் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Kamalhaasan in super singer junior 8 children songs viral

People looking for online information on Kamal Haasan, Super Singer, Super singer junior 8 will find this news story useful.