இந்த ஜூன் முதல் வார OTT ரிலீஸ் திரைப்படங்கள்.. எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த ஜூன் மாதம் முதல் வாரம் OTT-யில் ரிலீசாகும் படங்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

This June Month First Week OTT Release Movies List

KGF Chapter 2

யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய இந்த KGF Chapter 2 படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) வெளியானது. கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியானது. இந்த படம் சில நாட்களுக்கு முன்னதாக ப்ரைம் வீடியோ தளத்தில்  Early Rental வசதியோடு கிடைத்தது. இதையடுத்து தற்போது ப்ரைம் வீடியோவில் இன்று ஜூன் 3 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் குட்டப்பா

ஆர்கே செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மண்ட் பட நிறுவனங்கள் சார்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இதில் கே. எஸ். ரவிக்குமார், தர்ஷன், லொஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன்,  பூவையார், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

This June Month First Week OTT Release Movies List

இவர்களுடன் முக்கிய வேடத்தில் ரோபோ ஒன்றும் நடித்திருக்கிறது. ஆர்வி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ஆஹா தமிழ் ஒடிடியில் இன்று ஜூன்-3, 2022 வெளியாகி உள்ளது. 

ஐங்கரன்

ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்க,  ஐங்கரன் எனும் திரைப்படத்தை  ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு தமது 2வது படமாக இயக்கியுள்ளார். இந்த படத்தில் மகிமா நம்பியார் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்தை காமன்மேன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் ஆஹா தமிழ் ஒடிடியில் இன்று ஜூன்-3, 2022 வெளியாகி உள்ளது.

This June Month First Week OTT Release Movies List

அசோக வனம்லோ அர்ஜுன கல்யாணம்

இந்தத் திரைப்படம் ஆஹா OTT-யில் ஜூன் 3, 2022 வெளியாகி உள்ளது,  இந்தத் திரைப்படம் மே 6, 2022 அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை வித்யா சாகர் சிந்தா இயக்க, இப்படத்தில் விஷ்வ என்கே சென் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

 

 

 

தொடர்புடைய இணைப்புகள்

This June Month First Week OTT Release Movies List

People looking for online information on Aha, Aha Tamil, Amazon Prime, KGF, Netflix, OTT, Prime Video, Zee5 will find this news story useful.