தளபதி விஜய் கூட எப்போ நடிக்க போறிங்க? பிரபல பாலிவுட் நடிகை சொன்ன செம்ம பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஆகன்ஷா சிங் இந்தி தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

Bollywood actress Aakanksha Singh about movie with Vijay

Also Read | KGF 2 ஓடிடி ஸ்ட்ரீமிங் எப்போது? அமேசான் ப்ரைம் வெளியிட்ட ‘மாஸ்’ Update

இவர் இந்தி, கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ந போலே தும் நா மைனே குச் கஹா (2012) என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்தவர். தமிழில் நெஞ்சம் பேசுதே என்ற பெயரில் இந்த சீரியல் பாலிமர் டி.வியில் ஒளிபரப்பானது.

பின் இந்தி படமான வருண் தவான் - அலியா பட் நடித்த பத்ரிநாத் கி துல்ஹனியா (2017) திரைப்படத்திலும் அறிமுகமானார்.  சிங் மல்லி ராவா (2017) படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார், பின் அவர் கன்னடத்தில் பைல்வான் (2019) படத்திலும், தமிழில் கிளாப் (2022) படத்திலும் அறிமுகமானார். இதில் பைல்வான் படத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சுதீப்புக்கு ஜோடியாக நடித்திருந்தார். நாகர்ஜூனாவுடன் தேவதாஸ் படத்திலும் நடித்து பிரபலமானவர்.

Bollywood actress Aakanksha Singh about movie with Vijay

2021ல் பரம்பரா வெப் சீரிஸிலும், 2022ல் ஜெய் நடித்த வீரபாண்டிய புரம் படத்திலும் நடித்திருந்தார். கடைசியாக ரன்வே 34 படத்தில் அஜய் தேவ்கன், அமிதாப் பச்சனுடன் நடித்துள்ளார். இந்த படம் கடந்த மாதம் வெளியானது.

அடுத்ததாக  நானி தயாரிக்கும் Meet Cute ஆந்தாலஜியில் நடிக்க உள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த நடிகை ஆகன்ஷா, தனது நீண்டகால காதலரான குணால் சைனை 2014 இல் திருமணம் செய்து கொண்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆகன்ஷா அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்வதை வாடிக்கையாக கொண்டவர்.

Bollywood actress Aakanksha Singh about movie with Vijay

இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர், "தளபதி விஜய்யுடன் எப்போ படம் நடிப்பீங்க?" என கேட்ட கேள்விக்கு பதிலாக "எனக்காக கடவுளிடம் வேண்டுங்கள்.. விரைவில்" என பதில் அளித்துள்ளார். இந்த பதிலுக்கு பின்னணியில் தன்னுடைய புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

Bollywood actress Aakanksha Singh about movie with Vijay

கடைசியாக, நெல்சன் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் நடித்திருந்த நடிகர் விஜய், அடுத்ததாக வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்து வருகிறார்.

Bollywood actress Aakanksha Singh about movie with Vijay

Also Read | தருமபுர ஆதினத்தின் திருக்கடையூர் கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்.. முழு தகவல்

Bollywood actress Aakanksha Singh about movie with Vijay

People looking for online information on Aakanksha Singh, Bollywood actress, Thalapathy Vijay, Vijay will find this news story useful.