"இது என் கனவு".. கமல்ஹாசனுடன் 'விக்ரம்' படத்தில் நடித்தது பற்றி நெகிழ்ந்த சூர்யா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தில் பணியாற்றியது பற்றி சூர்யா நெகிழ்ச்சியான டிவீட் செய்துள்ளார்.

Suriya Tweet about Vikram Movie Rolex Character

‘விக்ரம்’ திரைப்படம் நேற்று (06.03.2022) உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.

Suriya Tweet about Vikram Movie Rolex Character

கிரிஷ் கங்காதரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராமன் கமலின் மகனாக 'பிரபஞ்சன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி நடித்துள்ளனர்.

Suriya Tweet about Vikram Movie Rolex Character

இப்படத்தில் கமல் கர்ணன் & விக்ரம் என்ற இரு பெயரிலும் நடித்துள்ளார். விஜய் சேதுபதி 'டாக்டர் சந்தனம்' எனும் பெயரிலும் , பஹத் பாசில் 'அமர்' எனும் பெயரிலும் நடித்துள்ளனர். சூர்யா 'ரோலக்ஸ்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Suriya Tweet about Vikram Movie Rolex Character

போதைப்பொருள் கடத்தும் கும்பலின் தலைவனாக சூர்யா நடித்திருந்தார். இந்த பாத்திரத்தில் நடித்தது குறித்து சூர்யா டிவீட் செய்துள்ளார். அதில், "அன்புள்ள கமல் அண்ணா, எப்படி சொல்றது? கனவு நனவான தருணம் உங்களுடன் திரையில் நடிக்க வேண்டும் என்பது. மிக்க நன்றி லோகேஷ். ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது." என டிவீட் செய்துள்ளார். 

இந்த டிவீட்டிற்கு கமல்ஹாசனும் பதில் அளித்துள்ளார். "இந்த கூட்டணி முன்பே நடக்க வேண்டியது.. சூர்யா சார்" என டிவீட் செய்துள்ளார். சூர்யா, விக்ரம் படத்தில் தன்னை சார் என அழைக்க வேண்டும் என கிளைமாக்சில் கட்டளையிடுவார். இதனை கமல் டிவிட்டில் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Suriya Tweet about Vikram Movie Rolex Character

People looking for online information on Kamal, Lokesh, Rolex, Suriya, Vikram will find this news story useful.