விக்ரம் படம் பத்தி.. அசத்தலான விஷயம் பகிர்ந்த நானி, நஸ்ரியா.. 'Exclusive' வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானி மற்றும் நஸ்ரியா ஆகியோர் நடிப்பில், அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் 'அன்டே சுந்தரனக்கி'. தெலுங்கில் உருவாகி உள்ள இந்த திரைப்படம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது.

Adade sundara nani and nazriya exclusive interview

பிரபல இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கி உள்ள இந்த படத்தை, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

அதே போல, நானிக்கு ஜோடியாக, நடிகை நஸ்ரியா நடித்துள்ள நிலையில், முதல் முறையாக அன்டே சுந்தரனக்கி மூலம், அவர் தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் டிரைலர், சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

ஆஹா சுந்தரா

சுந்தர் கதாபாத்திரத்தில் நானியும், லீலாவாக வரும் நஸ்ரியாவும் காமெடி, காதல் என டிரைலரில் பட்டையைக் கிளப்பி உள்ளார்கள். இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. தமிழில் 'அடடா சுந்தரா' என்ற பெயரிலும், மலையாளத்தில் 'ஆஹா சுந்தரா' என்ற பெயரிலும், ஜூன் மாதம் 10 ஆம் தேதியன்று ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

நஸ்ரியா - பகத் காதல்

இந்நிலையில், நானி மற்றும் நஸ்ரியா ஆகியோர், Behindwoods சேனலுக்கு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். இதில், இருவரும் தங்களின் ஆரம்பகால நடிப்பு பயணம் குறித்து பேசி இருந்தனர். தொடர்ந்து, நஸ்ரியா - பகத் திருமணம் குறித்து பேசிய நானி, "நான் பெங்களூர் டேய்ஸ் திரைப்படத்தை  பார்த்திருந்தேன். இதன் பின்னர், நஸ்ரியா - பகத் திருமணம் பற்றி கேள்விப்பட்டேன். அதனை அறிந்ததும், பெங்களூர் டேய்ஸ் படத்தின் போது, இருவருக்குள்ளும் காதல் உருவாகி இருக்கலாம் என நினைத்துக் கொண்டேன்" என கூற, இதற்கு நஸ்ரியாவும், "சரியான பதில்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நஸ்ரியா, "நானும் பகத்தும் முன்பே அறிமுகம் ஆனவர்கள் தான். ஆனால், பெங்களூர் டேய்ஸ் படப்பிடிப்பின் போது தான் காதல் உருவானது. எனக்கும், பகத்துக்கும் கூட நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என நினைக்கவே இல்லை" என தெரிவித்தார்.

அதே போல, பகத்தின் கண் கூட நடிக்கும் என பலரும் அவரது நடிப்பை பற்றி கூறுவார்கள். அப்படி, பகத் கண் நஸ்ரியாவை என்ன செய்தது என தொகுப்பாளர் கேட்க, "ரசிகர்களை கண்கள் மூலம், சிக்க வைத்தது போல, என்னையும் அவர் ஏதோ செய்து விழ வைத்து விட்டார்" என ஜாலியாக கூறினார்.

விக்ரம் படத்தை சென்னையில பாக்கணும்..

தொடர்ந்து, இன்று ரிலீஸ் ஆகியுள்ள விக்ரம் திரைப்படம் குறித்து பேசிய நானி, "சென்னையில் இன்று விக்ரம் படத்தை பார்க்க வேண்டும் என நான் விரும்புகிறேன். ஏனென்றால், இது தான் விக்ரம் பார்க்க சரியான இடமாக இருக்கும் என நான் கருதுகிறேன். Interview-வை நேரத்திற்கு முடித்து விட்டு விக்ரம் படத்தை பார்க்க வேண்டும் என நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்" என கூறினார்.

அதே போல, பேன் இந்தியா திரைப்படங்கள் குறித்தும், அடடே சுந்தரா திரைப்படம் குறித்தும், தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் இன்னும் நிறைய விஷயங்களை நஸ்ரியா மற்றும் நானி ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.

இது தொடர்பான முழு வீடியோவைக் காண:

விக்ரம் படம் பத்தி.. அசத்தலான விஷயம் பகிர்ந்த நானி, நஸ்ரியா.. 'EXCLUSIVE' வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Adade sundara nani and nazriya exclusive interview

People looking for online information on Adade Sundara, Exclusive, Nani, Nazriya nazim will find this news story useful.