www.garudabazaar.com

"இதுக்கு தாங்க ஊரே Waiting".. வாரிசு படம் குறித்து வெளியான அதிரடி தகவல்.. இனி சும்மா பத்திக்கும்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் தயாராகி வருகிறது. இதற்கு முன்பு நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருந்த 'பீஸ்ட்' படத்தில் விஜய் நடித்திருந்தார்.

Thalapathy Vijay Varisu trailer release date deets

Also Read | THUNIVU: கேங்ஸ்டர் லுக்கில் நடிகர் அஜித்.. மிரட்டலான போஸ்டருடன் வெளியான 3rd SINGLE அப்டேட்!

இதற்கு அடுத்தபடியாக, வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்திலும் விஜய் நடித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு படத்தில் இதுவரை 3 பாடல்கள் ரிலீஸ் ஆகி உள்ளது. முதல் சிங்கிளான 'ரஞ்சிதமே' பாடலை விஜய் மற்றும் மானஸி ஆகியோர் பாடி இருந்தனர். இதற்கு அடுத்தபடியாக, வெளியான 'தீ தளபதி' பாடலை சிலம்பரசன் மற்றும் ஹரிகா ஆகியோர் பாடி இருந்தனர். இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் வாரிசு படத்தின் 3 ஆவது சிங்கிள் 'Soul Of Varisu' வெளியாகி இருந்தது. இதனை பிரபல பாடகி சித்ரா பாடி இருந்தார். மூன்று பாடல்களுமே தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருவதால், எஸ் தமன் இசையில் உருவாகி உள்ள மீதி பாடல்களை கேட்கவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

Thalapathy Vijay Varisu trailer release date deets

மேலும் வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

அதே போல, வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 4 மணிக்கு இந்த விழா துவங்க உள்ளது. இதில் வாரிசு படக்குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thalapathy Vijay Varisu trailer release date deets

இந்த இசை வெளியீட்டு விழாவை பிரபல முன்னணி தமிழ் சேனலான சன் டிவி ஒளிபரப்பு செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. "விரைவில்.. வாரிசு இசை வெளியீட்டு விழா" என சன் டிவி நிறுவனமும் ட்வீட் செய்திருந்தது.

இந்த நிலையில், வாரிசு படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்தும் சில தகவல்கள் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து பிரத்யேகமாக நமக்கு கிடைத்துள்ளது. அதன் படி, வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் டிசம்பர் 31 ஆம் தேதி புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றது.

புத்தாண்டை முன்னிட்டு படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதால், புதிய வருடத்தை வாரிசு ட்ரைலருடன் தொடங்கவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளதாக தெரிகிறது.

Also Read | "அவர One Side-ஆ Love பண்றேன்".. விக்ரமன் பதிலுக்கு BiggBoss கொடுத்த செம Thug Life!!..😅

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay Varisu trailer release date deets

People looking for online information on Thalapathy Vijay, Varisu, Varisu trailer release update, Vijay will find this news story useful.