www.garudabazaar.com

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா.. ஒளிபரப்பு செய்யும் பிரபல முன்னணி TV சேனல்! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்த தகவல்கள்  வெளியாகியுள்ளன.

Vijay Varisu Audio Launch Telecast on Sun TV

Also Read | VARISU: வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா.. முழுவீச்சில் டிக்கெட் கூப்பன் வினியோகம்!

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Vijay Varisu Audio Launch Telecast on Sun TV

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார். மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி  கைப்பற்றி உள்ளார். சேலம்  ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார். மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Vijay Varisu Audio Launch Telecast on Sun TV

மேலும், வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

இதுவரை வாரிசு படத்தின் முதல் 3 சிங்கிள் பாடல்கள் வெளியாகியுள்ளன.

இந்த 3 பாடல்களை தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.

Vijay Varisu Audio Launch Telecast on Sun TV

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி   நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 4 மணிக்கு இந்த விழா துவங்க உள்ளது. இதில் வாரிசு படக்குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இசை வெளியீட்டு விழாவை பிரபல முன்னணி தமிழ் சேனலான சன் டிவி ஒளிபரப்பு செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. "விரைவில்.. வாரிசு இசை வெளியீட்டு விழா" என சன் டிவி நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.

Also Read | அஜித் நடிக்கும் 'துணிவு' படத்தின் தெலுங்கு டைட்டில் இதுதான்! ரிலீஸ் எப்போ?

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Varisu Audio Launch Telecast on Sun TV

People looking for online information on Sun TV, Varisu, Varisu Audio Launch Telecast, Vijay, Vijay Varisu Audio Launch will find this news story useful.