www.garudabazaar.com

"அவர One Side-ஆ Love பண்றேன்".. விக்ரமன் பதிலுக்கு BiggBoss கொடுத்த செம Thug Life!!..😅

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 70 நாட்களை கடந்த நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.

Bigg boss Thug life to Vikraman kathiravan laugh out

Also Read | Pathaan : செம டான்ஸ் ஆடிய ஷாருக்கான் & தீபிகா படுகோனே.. வெளியான 'பதான்' படத்தின் 2-வது பாடல் வீடியோ!

மேலும் இந்த வாரம் நடைபெறும் டாஸ்க், மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. இதற்கு காரணம், பள்ளி மற்றும் கல்லூரியாக பிக்பாஸ் வீடு மாறி வருவது தான். இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஆரம்ப பள்ளியாக மாறி இருந்த பிக்பாஸ் வீடு, அதன் பின்னர் மேல்நிலைப் பள்ளியாக மாறி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, தற்போது 1980-ஸில் இருக்கும் கல்லூரியாகவும் பிக் பாஸ் வீடு செட் செய்யப்பட்டுள்ளது. இந்திரன் சந்திரன் கலைக் கல்லூரி என்ற பெயரில், பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் Vintage உடைகளை அணிந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களாக வலம் வருகின்றனர். ஒன் சைடு லவ் செய்யும் சைக்காலஜி ஆசிரியராக விக்ரமனும், நடன ஆசிரியர்களாக இரண்டு போட்டியாளர்களும் உள்ளனர். மற்ற 7 பேரும் மாணவர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் வலம் வர, கலகலப்பாக எபிசோடுகள் சென்று கொண்டிருக்கிறது.

Bigg boss Thug life to Vikraman kathiravan laugh out

முந்தைய டாஸ்க்குகள் நடைபெறும் சமயத்தில் நிறைய சண்டைகள் தான் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி கொண்டே இருக்கும். இதனால், எப்போதும் ரணகளமாக தான் போட்டியாளர்கள் இயங்கி கொண்டே வந்தனர். ஆனால், பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி டாஸ்க், அதிகம் எமோஷனல் ஆகவும், ஜாலியாகவும் தான் சென்று கொண்டிருக்கிறது.

Bigg boss Thug life to Vikraman kathiravan laugh out

இதற்கிடையில், தங்களின் குடும்பத்தினர் குறித்து மனம் உருகி போட்டியாளர் பேசிய விஷயமும், கடிதம் எழுதும் டாஸ்க்கில் தங்களின் நெருக்கமான நபர்களுக்காக மனதை நொறுக்கும் வகையில் எழுதி இருந்த விஷயமும் பார்வையாளர்களையும் கண் கலங்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Bigg boss Thug life to Vikraman kathiravan laugh out

இந்த நிலையில், கல்லூரி டாஸ்க்கின் போது விக்ரமனுக்கு பிக்பாஸ் கொடுத்த Thug Life தொடர்பான செய்தி, அதிகம் வைரலாகி வருகிறது.

ஒன் சைடு லவ் செய்யும் சைக்காலஜி ஆசிரியராக வரும் விக்ரமன், பிக் பாஸிடம் பேசி விட்டு வெளியே வருவதாக தெறிகிறது. அந்த சமயத்தில், அங்கே நிற்கும் கதிரவன், "ஒன் சைடு லவ்" என விக்ரமனிடம் கூறுகிறார். தனது கதாபாத்திரம் பற்றி கதிர் சொன்னதும், "வெளியே கேட்டுச்சா?" என விக்ரமன் கேட்கிறார். இதற்கு பதில் சொல்லும் கதிர், "இல்ல. உள்ள அது தான் நடந்துச்சா அப்போ" என சிரித்துக் கொண்டே கூறுகிறார்.

Bigg boss Thug life to Vikraman kathiravan laugh out

இதன் பின்னர் பேசும் விக்ரமன், "ஆமா, நான் பிக்பாஸ ஒன் சைடா லவ் பண்ணிட்டு இருந்தேன்" என கூறிய மறுகணமே "இதுக்கு பேர் தான் போட்டு வாங்குறது" என தெரிவித்து Thug Life கொடுத்திருந்தார் பிக்பாஸ். இதனைக் கேட்டதுமே கதிரவன் வெடித்து சிரிக்க, "Thug Lfife பிக்பாஸ். சூப்பர்" என்றும் தெரிவிக்கிறார். விக்ரமனுக்கு பிக்பாஸ் பதில் சொன்னது தொடர்பான வீடியோ, தற்போது பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

Also Read | "இந்த 5 தமிழ் படங்களை வச்சு ஒரு Cinematic Universe".. லோகேஷ் கனகராஜ் சொன்ன செம்ம பதில்!

தொடர்புடைய இணைப்புகள்

Bigg boss Thug life to Vikraman kathiravan laugh out

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Bigg boss Thug life, Kathiravan, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.