www.garudabazaar.com

கிறிஸ்துமஸ்-க்கு தியேட்டரில் ரிலீஸாகும் முக்கிய திரைப்படங்கள்.. முழு லிஸ்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

This Christmas Weekend Theatrical Release Movies List

Also Read | "சாப்பிடலையா சார்".. இந்தியன் 2 ஷூட்டிங்கில் கமல் குறித்து உதயநிதி நெகிழ்ச்சி!

லத்தி

விஷால், சுனைனா நடிக்கும் 'லத்தி' படத்தை புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கியுள்ளார்.

லத்தி படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகிய இருவரும் இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்துள்ளனர். இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரித்தது.

This Christmas Weekend Theatrical Release Movies List

பாலசுப்ரமணியம் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் இந்திய அரசின் சென்சார் போர்டு  யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இன்று (22.12 .2022) இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

கனெக்ட்

கனெக்ட் படத்தை அஸ்வின் சரவணன் நயன்தாரா நடிப்பில்  இயக்கியுள்ளார். இந்த படத்தில் அனுபம் கேர், வினய், சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார்.

This Christmas Weekend Theatrical Release Movies List

இந்த திரைப்படம் இன்று   (22.12.2022) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.  இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படம் 99 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

18 Pages (தெலுங்கு)

இயக்குனர் சூர்யா பிரதாப் இயக்கத்தில், நிகில் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஜோடியாக நடித்துள்ள 18 பேஜஸ் டிசம்பர் 23ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

இப்படத்திற்கு கதை, வசனம் எழுதியவர் புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் ஆவார். ஜிஏ2 பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. அல்லு அரவிந்த் இந்த படத்தை வழங்குகிறார்.

This Christmas Weekend Theatrical Release Movies List

CIRKUS (இந்தி)

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் பூஜா ஹெக்டே, ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிப்பில் ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள சர்க்கஸ் திரைப்படம் டிசம்பர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் தீபிகா படுகோன் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் கௌரவ வேடங்களில் நடித்துள்ளனர்.

This Christmas Weekend Theatrical Release Movies List

Dhamaka (தெலுங்கு)

இயக்குனர் திரிநாதராவ் நக்கினா இயக்கத்தில் ரவி தேஜா மற்றும் ஸ்ரீ லீலா ஜோடியாக நடித்துள்ள தமாகா திரைப்படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

This Christmas Weekend Theatrical Release Movies List

Also Read | இந்த வாரம் கிறிஸ்துமஸ்-க்கு OTT- யில் ரிலீஸாகும் முக்கிய திரைப்படங்கள்! முழு விவரம்

This Christmas Weekend Theatrical Release Movies List

People looking for online information on Christmas Weekend Movie, Christmas Weekend Theatrical Release Movies will find this news story useful.