www.garudabazaar.com

‘யார் ஃபேவரிட்டஸம் பண்றா?’.. அமுது & மைனா இடையே உருண்ட பழைய பிரச்சனை..! bigg boss 6

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

myna amudhavanan tussle favouritism bigg boss 6 tamil

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, வைல்டு கார்டு எண்ட்ரியில் மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

myna amudhavanan tussle favouritism bigg boss 6 tamil

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.  கடைசிவாரத்தில் ஜனனி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் 71வது நாளில் மீண்டும் சம்பிரதாய நாமினேஷன் தொடங்க, ஒவ்வொருவரும் நாமினேட் செய்ய விரும்புபவரை (ஆக்சுவலி விரும்பாதவரை) சிவப்பு மையால் குறியிட்டு நாமினேட் செய்தனர்.

.myna amudhavanan tussle favouritism bigg boss 6 tamil

இதனிடையே ஷிவின், “ஜனனி போ.. போ..ன்னு அசிம் சொன்னாரு” என்று மீண்டும் பழைய டாப்பிக்கை தூசி தட்ட, “நீங்களும்தான் தனாவ போ.. போ..’ன்னு சொன்னீங்க” என அமுதுவும் கூறத் தொடங்க இந்த பேச்சு மெதுவாக  அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. அசிமோ, ஷிவின் செய்த தவறை ஒப்புக்கொள்ளவோ சரண்டர் ஆகவோ மாட்டார் என விமர்சித்தார். மைனாவோ,  “என்னை நீங்க கட்டீனீங்களே..  ஜனனியை சரியாவே கட்டலயே” என்று தன் தரப்பு வாதத்தை முன்வைத்தார். இதுதான் சிறிய உரசலை அமுதவாணனுக்கும் மைனாவிற்கும் இடையே உண்டாக்க காரணமாக அமைந்தது. மொத்தத்தில் நாமினேஷன் களைகட்டியது.

myna amudhavanan tussle favouritism bigg boss 6 tamil

எல்லாம் முடிந்து களைந்த (களைத்த) பிறகும், மைனாவும் அமுதவாணனும் ‘யார் ஃபேவரிட்டஸம்?’ என்கிற பேச்சை தொடர்ந்தவண்ணமே இருந்தனர்.  தன்னை கட்டின கட்டும், ஜனினியை கட்டின கட்டும் ஒன்றல்ல என்பதை மைனா ஆணித்தரமாக சொல்லிக்கொண்டிடுருந்தார். அமுதுவும் அதற்கு பதில் வாதத்தை வைத்துக்கொண்டே தான் இருந்தார்.

myna amudhavanan tussle favouritism bigg boss 6 tamil

இறுதியில் யாரோ ஒருவர் முடித்தால் தான் பிரச்சனை முடியும். அந்த பொறுப்பை தானே எடுத்துக்கொண்ட மைனா, “சரி வெச்சுக்க போ..” என விட்டுக்கொடுத்துவிட்டார். விஜய் டிவியில் நட்சத்திரங்களான இவர்கள் இயல்பில் நல்ல நண்பர்கள் எனினும் டாஸ்கினால் இந்த முரண்கள் எழுந்தன என்பதும் மற்ற வேளைகளில் இவர்கள் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

myna amudhavanan tussle favouritism bigg boss 6 tamil

People looking for online information on Amudhavanan, Myna, Tussle favouritism bigg boss 6 tamil will find this news story useful.