மாஸ்டரின் மாஸ் செல்ஃபி - பிரபலங்கள் கமெண்ட் - 'இத விடவா பெருசு ஆஸ்கரு...' 'சூப்பர் ஸ்டார்...'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சியில் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கே சில பாஜகவினர் படப்பிடிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக செய்திகள் வெளியானது.

Thalapathy Vijay Shares Master Selfie, Kushbhoo, Pradeep Ranganathan, Archana Kalpathi Comments to the Picture

இதனையறிந்த விஜய் ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்துக்கு வேனில் படையெடுத்தனர். முதல் நாள் வேன் ஒன்றின் மேல் ஏறி நின்ற விஜய் அவர்களை பார்த்து கையசைத்தார். பின்னர் அங்கிருந்தபடியே ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

மேலும் மறுநாளான நேற்றும் (11-02-2019) ரசிகர்களை வேனின் மீது ஏறி நின்று சந்தித்தார். ரசிகர்கள் காட்டிய ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரசிகர்களை நோக்கி சிரம் தாழ்ந்தார். பின்னர் முதல் நாள் எடுத்துக்கொண்ட செல்ஃபியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த செல்ஃபி வேற லெவல் டிரெண்டானது. ரசிகர்களது முதல் பிரபலங்கள் வரை அந்த செல்ஃபியை பகிர்ந்து தளபதியை புகழ்ந்தனர்.

அதில் குறிப்பிடும்படியாக 'கோமாளி' பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், ''ஆஸ்கரா ? இத விடவா பெருசு ஆஸ்கரு..'' என்றும் நடிகை குஷ்பு, 'More Power to You' என்றும் தங்கள் கருத்தை பதிவு செய்தனர். மேலும் பிரபல பைக் ரேஸ் வீராங்கனையான அலீசா அப்துல்லா, சூப்பர் ஸ்டார் என்றும் இயக்குநர் ரத்ன குமார், 'அசையும் சொத்துக்கள்' என்றும் 'பிகில்' தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ''வெறித்தனம்'' என்றும் அந்த செல்ஃபிக்கு கமெண்ட் செய்தனர்.

Entertainment sub editor