விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தில் இருந்து புதிய வீடியோ – இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படம் ’மாஸ்டர்’. இதில் அவரோடு விஜய் சேதுபதி, ராதிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது விஜய் வீட்டில் ஐடி ரெய்ட் நடந்தது. அதற்கான சென்னை சென்று நெய்வேலி திரும்பிய விஜய்க்கு ரசிகர்கள் படையாகத் திரண்டு பெரும் அன்பை வெளிப்படுத்தினர்.

Thalapathy Vijay Master Vijay Sethupathi New Video about Oru Kutti Katha Sung by Vijay

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யம் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் விஜய் பாடிய பாடலான ’ஒரு குட்டிக் கத’ காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் என நேற்று அதிகாரப்பூர்வமாக  வெளியானது.

இதைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தில் இருந்து ஒரு புதிய வீடியோ வெளியாகி உள்ளது. இந்த படத்தில் இருந்து மேலும் பல அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Entertainment sub editor