’காஞ்சனா’ ஹிந்தி ரீமேக் ஷூட்டில் இருந்து ராகவா லாரன்ஸ் வெளியிட்ட புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2011ம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த திரைப்படம் ’முனி 2 – காஞ்சனா’. ராகவா லாரன்ஸ், சரத்குமார், லக்‌ஷ்மி ராய், கோவை சரளா என்று ஏரளமானோர் நடித்திருந்த இந்த திரைப்படம் காமெடி கலந்த திகில் திரைப்படமாக உருவாகி வெற்றிபெற்றது.

Raghava Lawrence uploads a photo with Akshay Kumar Kanchana remake laxmi bomb shoot spot

இந்த படம் 'லக்‌ஷ்மி பாம்' என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. அக்‌ஷை குமார் நடிக்கும் இந்த திரைப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்குகிறார்.  இந்த படத்தின் ஷூட் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஷூட் ஸ்பாட்டில் அக்‌ஷை குமாரோடு இருக்கும் புகைப்படம் ஒன்றை ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ளார். அதில், ’லக்‌ஷ்மி பாம்’ படத்துக்காக ஒரு பாடல் காட்சியின் ஷூட்டில் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், அக்‌ஷைக்குமார் போன்ற ஒரு நேரத்தை மதிக்கும், கடுமையாக உழைக்கும், பகட்டில்லாமல் பழமும் மனிதரோடு பணியாற்றுவது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor