தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ படக்குழு வெளியிட்ட புதிய செய்தி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடித்துவரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் இவருடன் விஜய் சேதுபதி,  மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கெனவே வெளியாகி செம வைரலானது.

Thalapathy Vijay Master new update Enna Nanba Readyaa

விஜய் ஸ்டைலான தோற்றத்தில் நடிக்கும் இந்த படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு பற்றியும் மற்ற விவரங்கள் பற்றியும் மாஸ்டரில் பணியாற்றுபவர்கள் அவ்வப்போது சர்ப்ரைஸ் ஹிண்ட் கொடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில் படத்தை தயாரிக்கும் எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் மாஸ்டர் அப்டேட்டுக்கு ‘என்ன ரெடியா நண்பா’ என்று கேட்கப் பட்டுள்ளது. விரைவில் மாஸ்டரில் இருந்து ஒரு ஹெவியான அப்டேட் இருக்கிறது என்பதை இந்த போஸ்டர் முன்மொழிந்துள்ளது.

Entertainment sub editor