இளம் சினிமா நடிகை, மாலில் நகைகள் திருடி போலீசில் மாட்டிக் கொண்டார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை திருட்டில் ஈடுபடும் சீன் திரைப்படங்களில் வந்திருக்கிறது. ஆனால் நிஜ வாழ்வில் நடிகை திருடியதாக எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? திரைப்படங்களில் வரும் ட்விஸ்டுக்கு சவால் விடும் சம்பவம் மகராஷ்டிரா மாநிலம் பூனாவில் நடந்தேறியிருக்கிறது.

Actress Snehlata Vasant Patil stole gold rings at Mall caught by police Pune Maharashtra

TV9 மராத்தியின் செய்திப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை பூனா குற்றப்பிரிவு போலீசார் நகை திருடிய குற்றத்திற்காக 25 வயது இளம் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். இவர் திருடிய 2 தங்க மோதிரங்களின் விலை சுமார் 50,000 ரூபாய் என்று கூறப்படுகிறது. இவரிடம் நடத்திய விசாரணையில் போலீசாருக்கு கொஞ்சம் ஷாக்கான தகவல்கள் கிடைத்தன. ’என்ன வேலை செய்கிறாய்?’ என்றதற்கு ‘நான் ஒரு திரைப்பட நடிகை’ என்று கூறியிருக்கிறார் அந்த பெண்.

இது நிஜம் தானா இல்லை தப்பித்துக்கொள்ள சொல்லும் பொய்யா என்று விசாரித்தால்… ஸ்னேஹ்லதா வசந்த் பாடில், 3 திரைப்படங்களில் முகம் காட்டியிருப்பது தெரியவந்தது. என்றபோதும் அவர் நகை திருடிய குற்றத்தை போலீசாரிடம் ஒப்புக் கொண்டார். கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் மீது திருட்டு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கின்றன.

Entertainment sub editor