www.garudabazaar.com
iTechUS

தளபதி 67 படத்தின் மிரட்டும் போஸ்டர்.. டிசைன் பண்ணது இவரா..! மனுசன் கையிலேயே வரஞ்சுருக்காரு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி 67 படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  சில நாட்களுக்கு முன் வெளியானது.

Vijay THALAPATHY 67 Movie Posters Designed by Gopi Prasanna

                       Images are subject to © copyright to their respective owners.

Also Read | பாரதி கண்ணம்மா சீசன் 2 -ல் ஹீரோவாக நடிக்கிறாரா பிரபல சன் டிவி சீரியல் ஹீரோ..?

நடிகர் விஜய் நடிப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் தளபதி 67 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Vijay THALAPATHY 67 Movie Posters Designed by Gopi Prasanna

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார்.

இந்த படத்தின் படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

Vijay THALAPATHY 67 Movie Posters Designed by Gopi Prasanna

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர்.

தளபதி 67 படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை சன் டிவியும், ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றி உள்ளது.

Vijay THALAPATHY 67 Movie Posters Designed by Gopi Prasanna

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இன்று தளபதி 67 படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் பனியனுடன் கையில் ரத்தத்துடன் போஸ்டரில் தோன்றியுள்ளார். விஜய்யின் உருவம் கோட்டோவியமாக போஸ்டரில் வடிவமைப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த போஸ்டரை டிசைனர் கோபி பிரசன்னா வடிவமைத்துள்ளார். கையிலேயே இந்த போஸ்டரை டிசைனர் கோபி பிரசன்னா வரைந்துள்ளார் என தெரிகிறது.

கோபி பிரசன்னா சமீபத்தில் வெளியான துணிவு, வாரிசு படங்களின் போஸ்டரை வடிவமைப்பு செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | "GOOD BYE".. லண்டனில் இருந்து விக்னேஷ் சிவன் பகிர்ந்த லேட்டஸ்ட் பதிவு.. வைரலாகும் புகைப்படம்!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay THALAPATHY 67 Movie Posters Designed by Gopi Prasanna

People looking for online information on Gopi Prasanna, Lokesh Kanagaraj, Thalapathy 67, THALAPATHY 67 Movie Posters, Vijay will find this news story useful.