www.garudabazaar.com
iTechUS

"கைதி, தளபதி 67".. ரெண்டு படம் நடுவுல இப்டி ஒண்ணு இருக்கா?.. Trend செய்யும் ரசிகர்கள்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக தளபதி 67 படம் உருவாகி வருகிறது. விஜய் நடித்திருந்த மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது தளபதி 67 படத்தையும் இயக்கி வருகிறார்.

Kaithi and Thalapathy 67 posters trending in social media

                               Images are subject to © copyright to their respective owners.

Also Read | "விக்ரமன் உங்க வீட்டு புள்ளையா?, தமிழ்நாட்டோட புள்ளையா?".. அப்பா சொன்ன அசர வைக்கும் பதில்!!

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி துவங்கியது.

இசை அமைப்பாளர் அனிருத், தளபதி 67 படத்திற்கு இசை அமைக்கிறார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர்.

Kaithi and Thalapathy 67 posters trending in social media

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே, தளபதி 67 படத்தில் இணைந்துள்ள நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியான வண்ணம் இருந்தது. அதன்படி, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் மற்றும் சாண்டி உள்ளிட்டோர் தளபதி 67 படத்தில் நடித்து வருவது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.

அதே போல, நடிகை த்ரிஷாவும் சுமார் 14 வருடங்களுக்கு பிறகு, விஜய்யுடன் தளபதி 67 படத்தில் இணைந்து நடிக்க உள்ளார். இதனிடையே, தளபதி 67 படத்தின் பூஜை நடந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இருந்தது. இதில், நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் S.லலித்குமார், இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிசாமி, அர்ஜுன், த்ரிஷா, மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சாண்டி, பிரபல இயக்குனர்கள் கார்த்தி சுப்புராஜ், புஷ்கர், ரவிக்குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Kaithi and Thalapathy 67 posters trending in social media

Images are subject to © copyright to their respective owners.

இதனையடுத்து, தளபதி 67 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவியும், ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்ஃபிளிக்ஸூம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகின. இந்த நிலையில், தளபதி 67 படத்தின் டைட்டில் எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

அதன்படி, தளபதி 67 படத்தின் டைட்டில் நாளை (03.02.2023) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் நடிகர் விஜய் முழுவதும் ரத்த கரையில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு போஸ்டரும் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, தளபதி 67 படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்பதை பற்றியும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில், கைதி மற்றும் தளபதி 67 படத்தின் போஸ்டர்கள் இரண்டையும் குறிப்பிட்டு நெட்டிசன்கள் நிறைய கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். கைதி படத்தின் போஸ்டர் ஒன்றில், கார்த்தி முகம் ரத்தத்தின் மூலம் இருக்க, மேலிருந்து கீழ் வரை ரத்தம் வழிவது போன்றும் போஸ்டர் இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது விஜய்யின் தளபதி 67 படத்தின் டைட்டில் Announcement போஸ்டரும் முழுக்க முழுக்க ரத்தத்தை அடிப்படையாக கொண்டு விஜய்யின் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இரண்டு படங்கள் நடுவே, இருக்கும் போஸ்டர் ஒற்றுமைகள் பற்றி பலரும் பல விதமான கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | பிக்பாஸ்ல இப்படி நடந்தது எங்களுக்கு வேதனையா இருந்தது.. முதல்முறை உடைத்த விக்ரமன் தந்தை..!

தொடர்புடைய இணைப்புகள்

Kaithi and Thalapathy 67 posters trending in social media

People looking for online information on Kaithi and Thalapathy 67 posters trending, Kaithi Tamil, Thalapathy 67 will find this news story useful.