தெறி, மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி-63 படத்தில் நடித்து வருகிறார், விஜய்.
இதனை அடுத்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேற்றுமரியாதை நிமித்தமாக இந்த படத்தின் தயாரிப்பாளரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், எடிட்டர் பிலோமின்ராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் உடனிருந்தனர். எனவே இந்த படத்தில் இவர்கள் மூவரும் பணிபுரியவுள்ளது உறுதி செய்யப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது .
'கைதி' படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் முடிந்துவிடும் என்றும் அதன்பின்னர் 'தளபதி 64' படத்தின் ஆரம்பகட்ட பணியை லோகேஷ் தொடங்கவிருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கி 2020 தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.