ரசிகர்களுக்காக மொபைல் ஆப் தொடங்கிய அஜித் பட வில்லன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் அருண் விஜய் தனது ரசிகர்களுடன் உரையாட புதிய மொபைல் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.

Arun Vijay launched Mobile App to interact with his fans

இந்த மொபைல் ஆப் மூலம் தான் நடிக்கவிருக்கும் திரைப்படங்கள் குறித்த தகவல்களை அறியவும், ரசிகர்களுடன் நேரடியாக உரையாடும் நோக்கில் அறிமுகம் செய்திருப்பதாக கூறியுள்ளார்.

இந்த மொபைல் ஆப், தன்னையும், தனது ரசிகர்களையும் இணைக்கும் பாலமாக இருக்கும் என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தடம்’ திரைப்படம் வசூல மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட் படமானது.

இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ் நடித்து வரும் ‘சாஹோ’ திரைபப்டத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். மேலும், ‘பாக்ஸர்’ படத்தில் நடிகை ரித்திகா சிங்குடன் நடிக்கிறார். விரைவில் இப்படம் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.