தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, பஹத் ஃபாசில், சமந்தா, ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து கடந்த மார்ச் 29 ஆம் தேதி வெளியான படம் 'சூப்பர் டீலக்ஸ்'
![Vijay sethupathi And Thiyagarajan Kumararaja conversation about Super Deluxe Vijay sethupathi And Thiyagarajan Kumararaja conversation about Super Deluxe](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-16/images/vijay-sethupathi-and-thiyagarajan-kumararaja-conversation-about-super-deluxe-photos-pictures-stills.jpg)
இந்த படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இந்த படம் உருவான விதம் குறித்து விஜய் சேதுபதியும் தியாகராஜன் குமாரராஜாவும் நிகழ்த்திய உரையாடலை வெளியிட்டனர்.
அப்போது படம் பன்றது நிம்மதியற்ற மனநிலையை கிரியேட் பண்ணுதா என்று தியாகராஜன் குமாரராஜாவிடம் கேட்கிறார் . அதற்கு பதிலளிக்கும் தியாகராஜன், எனக்கு படம் பன்றதுல சுவாரஸியமே இல்ல. என்ன இப்படி சும்மா உட்காந்துட்டு இருக்க சொன்னா உட்கார்ந்துட்டு இருப்பேன்.
ஆனா இது தான் தொழில்னு முடிவு பண்ணிட்டா டெடிக்கேஷனுடன் செய்யணும். அவ்ளோ தான். ஆனாலும் ஒரு வகையில் மன உளைச்சல் தான்' என்றார். இது இந்த உரையாடலின் முதல் பகுதிதான். அடுத்தடுத்து உரையாடல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
'எனக்கு படம் பன்றதுல சுவாரஸியிமே இல்ல' - சூப்பர் டீலக்ஸ் தரப்பு வெளியிட்ட வீடியோ வீடியோ