அவ்னி கிரியேஷன்ஸ் சார்பில் இயக்குநர் சுந்தர் சி தயாரித்து ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்திருக்கும் படம் 'நட்பே துணை'. இந்த படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் கரு.பழனியப்பன், பாண்டியராஜன், கௌசல்யா ஆகியோருடன் எருமசாணி விஜய், ஷாரா, ஆர்ஜே விக்னேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து Behindwoods Tvக்கு எரும சாணி விஜய் பேட்டியளித்த போது, ''படம் வெளியாகி இப்ப வரை பயமாகத்தான் இருக்கிறது. இந்த படத்துக்காக காலையில் 6 மணிக்கே நான், ஹிப்ஹாப் தமிழா ஆதி உள்ளிட்டோர் ஹாக்கி பயிற்சி செய்வோம்.
நாங்கள் தெரியாமல் ஹாக்கி பேட் சென்று சொல்லிவிட்டால் போது கிரவுண்டை சுற்றி இரண்டு ரவுண்டு ஓட சொல்வார்கள். நான் மட்டுமல்ல. எனக்கு முன்னாடி ஸ்டிக் ஸ்டிக் என்று கத்திக் கொண்டு ஆதி ஓடிக்கொண்டிருப்பார்'' என்றார்.
''இதற்காக ஹிப்ஹாப் தமிழாவுக்கு பனிஸ்மென்ட் கிடைத்தது'' வீடியோ