நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் காம்ரேட்’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது.

இயக்குநர் பரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மண்டனா இணைந்து நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 தென்னிந்திய மொழிகளில் வெளியாகிறது.
யாஷ் ரங்கினேனி தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அடிதடியுடன் ஆக்ஷன் காட்சிகள் கலந்த டீசரின் இறுதிய்யில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகாவின் முத்தம் ஹைலைட்டாக இருந்தது.
இந்நிலையில், ராஷ்மிகாவின் பிறந்தநாள் கடந்த ஏப்.5ம் தேதி கொண்டாடப்பட்டது. டியர் காம்ரேட் படக்குழு சார்பில் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக, இப்படத்தில் டியர் லில்லியாக நடித்துள்ள ராஷ்மிகாவை பற்றிய பாடலை இன்று வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது.
ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ள இப்படத்தின் ‘ஆகாச வீடு கட்டும்’ என்று தமிழில் தொடங்கும் பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடி சேர்ந்த நடித்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘இன்கேம் இன்கேம்’ பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
டியர் காம்ரேட்- ராஷ்மிகாவின் பர்த்டே சர்ப்ரைசாக வெளியான முதல் பாடல் வீடியோ