விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'வாட்ச்மேன்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் சம்யுக்தா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு ஜ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்த படத்தை அருண்மொழி மாணிக்கம் தனது டபுள் மீனிங் புரொடக்ஷன் சார்பில் தயாரித்துள்ளார்.
இந்த படம் குறித்து தனது ட்விட்டரில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், தனது ட்விட்டர் பக்கத்தில் 'வாட்ச்மேன்' திரைப்படம் பார்த்தேன். ஆரம்பம் முதல் இறுதி வரை, திரில்லருக்கே திரல்லர்.
'நாச்சியார்', 'சர்வம் தாளமயம்' படங்களுக்கு பிறகு இதுதான் ஜி.வி.பிரகாஷ் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்துக்கு பெரிய பிளஸ் படத்தின் பின்னணி இசையும் இந்த படத்தின் நடித்துள்ள நாயும் தான். குழந்தைகளுடன் இந்த படத்தை பார்த்து மகிழுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இயக்குநர் விஜய்யின் 'வாட்ச்மேன்' பார்த்தேன். இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்கக்கூடிய திரில்லர். ஜி.வி.பிரகாஷின் சிறப்பான நடிப்பு, மற்றும் புரோனோ என்ற நாயின் ஆக்ஷன் காட்சிகள் ஆகியவை இந்த படத்துக்கு பலம். இயக்குநர் அனைவரையையும் சிறப்பாக கையாண்டிருக்கிறார். இந்த வார இறுதியில் இந்த படத்தை குடும்பத்துடன் பாருங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.