சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சூப்பர் ஹிட் மியூசிக் காம்போ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘Mr லோக்கல்’ திரைப்படத்தில் சூப்பர் ஹிட் இசையமைப்பாளர்கள் இருவர் மீண்டும் இணைந்துள்ளனர்.

Hiphop Tamizha Aadhi and Anirudh to join again for Sivakarthikeyan's 'Mr Local' after Vijay's Kaththi

இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப்-ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘நட்பே துணை’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘Mr லோக்கல்' திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

‘வேலைக்காரன்’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து நடித்துள்ளார். காமெடி கலந்த காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஹிப்-ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத், ஒரு குத்து பாடல் ஒன்றை பாடியுள்ளார். ஏற்கனவே, சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர்நீச்சல்’ படத்தில் அனிருத் இசையில் ‘எதிர் நீச்சல்’ என்ற டைட்டில் பாடலை ஹிப்-ஹாப் தமிழா பாடியிருந்தார். அதன் பின், விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படத்திலும் அனிருத் இசையில், ‘பக்கம் வந்து ஒரு முத்தம் கொடு’ என்ற பாடலை ஹிப்-ஹாப் தமிழா ஆதி பாடினார்.

தற்போது முதன்முறையாக ஹிப்-ஹாப் தமிழா ஆதியின் இசையில் அனிருத் ஒரு பாடல் பாடியுள்ளார். ‘Mr லோக்கல்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் நாளை வெளியாகவுள்ளது. இப்படம் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வரும் மே.1ம் தேதி ரிலீசாகவுள்ளது.