தமிழ் Block Buster படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் 'தல 60' தயாரிப்பாளர்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 22, 2019 11:19 AM
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘கோமாளி’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு. கே.எஸ்.ரவிக்குமார், ஷா ரா, ஆர்ஜே ஆனந்தி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்த இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் ரீமேக் உரிமத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த படத்தில் ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் நடிக்கவிருப்பதாக தெரிகிறது.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘தல 60’ திரைப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.