KAAPAN USA OTHERS

தல அஜித்தின் பழைய வீடியோவை பகிர்ந்த பிரபல பெண் பைக் ரேஸர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்து வெளியான படம் நேர்கொண்ட பார்வை. வினோத் இயக்கிய இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

Bike Racer Alisha Abdullah Shared Video of Thala Ajith Kumar

இந்த படத்தில் ஷரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து வினோத் இயக்கும் தல 60 படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்கவிருக்கிறார். இந்நிலையில் பிரபல பைக் ரேஸர் அலிஸா அப்துல்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித் தொடர்பான 5 வருடத்துக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தல அஜித், நல்லா பண்ணுங்க, வாழ்த்துகள், பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள் என அலிஷாவிற்கு வாழ்த்து சொல்கிறார்.</