கவினா? சேரனா? யாரை காப்பாற்ற நினைக்கிறீங்க..? - வசமா சிக்கிட்டாங்க லாஸ்லியா!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 22, 2019 10:50 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் கோல்டன் டிக்கெட்டுக்கான டாஸ்குகள் கடுமையாக கொடுக்கப்பட்டது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கடந்த வாரம் வனிதா வெளியேறியதைத் தொடர்ந்து, இந்த வாரம் எலிமினேஷனுக்கு சேரன், கவின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் நாமினேட் ஆகினர். இவர்களில் காப்பாற்றப்படும் போட்டியாளர் யார் என்பது இன்றைய எபிசோடில் தெரிய வரும்.
இந்நிலையில், இன்றைய எபிசோடிற்கான முதல் புரொமோவில், கவின், சேரன் ஆகியோரில் யாரை காப்பாற்ற நினைக்கிறீர்கள் என கமல்ஹாசன் லாச்லியாவிடம் கேள்வி எழுப்ப, லாஸ்லியா தான் வெளியேறினாலும் பரவாயில்லை, சேரன் மற்றும் கவின் பிக் பாஸ் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என தெரிவித்தார்.
இதனிடையே, நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லும் கோல்டன் டிக்கெட்டை முகென் தட்டிச் சென்றார். இதையடுத்து, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும்.
கவினா? சேரனா? யாரை காப்பாற்ற நினைக்கிறீங்க..? - வசமா சிக்கிட்டாங்க லாஸ்லியா! வீடியோ