''கோமாளி' படத்துல விஜய் பற்றிய டயலாக் ஏன் ?' - விளக்கம் சொன்ன பிரபல நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள படம் 'கோமாளி'. இந்த படத்தில் அவருடன் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, ஷாரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

Shah Ra Speaks about Vijay and Jayam Ravi's Comali

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய இந்த படம் ரசிகர்களின் பேராதரவை பெற்றது. இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார். இந்த படம் குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் நடிகர் ஷாரா Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

அப்போது அவரிடம் கோமாளி படத்தில் தளபதி ஃபேன் பொய் சொல்லமாட்டான் என்று ஷாரா டயலாக் பேசியிருப்பார். அதுகுறித்து தொகுப்பாளர் தாரா அதன் காரணம் என்ன் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், படக்குழுவின்ர் கொடுத்த டிஷர்ட்டில் விஜய் ஃபோட்டோ இருந்தது. அத பார்த்ததும் உடனே அந்த டயலாக் பேசுனேன். உண்மையிலே நான் விஜய் ஃபேன் என்றார்.

''கோமாளி' படத்துல விஜய் பற்றிய டயலாக் ஏன் ?' - விளக்கம் சொன்ன பிரபல நடிகர் வீடியோ