ஜெயம் ரவி படத்தில் இணையும் தேசிய விருது பெற்ற பிரபலங்கள்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 09, 2019 04:33 PM
அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து வெளியான படம் 'கோமாளி'. வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படம் ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார்.

இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் படங்களின் இயக்குநர் லக்ஷ்மன் படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். ஜெயம் ரவியின் 25 வது படமான இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
இதன் பிறகு இயக்குநர் அஹமத் இயக்கும் படத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். தேசிய விருது பெற்ற கலை இயக்குநர்கள் ஸ்ரீராம் ஐயங்ரார் மற்றும் சுஜீத் போன்றோர் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் புகழ்பெற்ற பாஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவதி உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்துள்ளனர்.
இந்த படத்தில் முக்கிய காட்சிக்கான அரங்கம் அமைக்கப்பட்டு முக்கிய நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு துர்க்மேனிஸ்தான் நாட்டில் ரூ8 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்படவுள்ளது. வில்லனின் இருப்பிடம் மலை மற்றும் ஆற்றுப் பிண்ணனியில் பிரேவ் ஹார்ட், லார்டு ஆஃப் தி ரிங்க்ஸ், கிளேடியட்டர் போன்ற படங்களை போல வடிவமைக்கபபடவுள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு அக்டோபர் 8 முதல் துவங்கப்படவிருக்கிறது.