பொங்கல் TO தீபாவளி - தல அஜித் 'விஸ்வாசம்' படத்தின் விநியோகஸ்தர் அதிரடி ட்விட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று வெளியான விஸ்வாசம் படம் பற்றி  படத்தின் விநியோகஸ்தர் ட்விட் செய்துள்ளார்.

Thala Ajith Kumar Viswasam Nayanthara KJR Studios Tweet

அஜித்-நயன்தாரா நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகை அன்று வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 4வது முறையாக இணைந்த அஜித்-சிவா கூட்டணியில் உருவான ‘விஸ்வாசம்’ திரைப்படம் அப்பா-மகள் இடையேயான பாச பிணைப்பை மையப்படுத்தி குடும்ப பின்னணியில் உருவாகி ரசிகர்களை கவர்ந்தது.

இன்னிலையில் இப்படத்தை விநியோகம் செய்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், பொங்கலுக்கு திரையிடப்பட்டு தீபாவளி வரை நாம் இதை பேசிக்கொண்டிருக்கிறோம் எனினும் எத்தனை தீபாவளி வந்தாலும்  விஸ்வாசம் திரைப்படத்தின் சாதனை மறந்துவிடவோ மறைத்து விடவோ முடியாது. என டுவிட் செய்துள்ளார்.