TASMAC திறப்பு... எதிர்ப்பு தெரிவிக்கும் 'மாஸ்டர்' பிரபலம்.. பிரபலங்கள் அரசுக்கு கோரிக்கை...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வரும் மே 7-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

TASMAC திறப்பு தமிழ் சினிமா பிரபலங்கள் அரசுக்கு கோரிக்கை Popular tamil celebrities raise questions against TASMAC reopen in tamilnadu during corona lockdown

அதுவும் மற்ற மாநிலங்களில் மது கடைகளில் மக்கள் முண்டியடிக்கும் விடீயோக்கள் பீதியை கிளப்பிய நிலையில், பல பிரபலங்களும் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உலகநாயகன் கமல் இதுபற்றி "கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு,  இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு?" என்று கேள்வி எழுப்பினார்.

 

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் "இந்த நேரத்தில் டாஸ்மாக்கை திறப்பது ஆபத்தான காரியம். அரசு மறு  பரிசீலனை செய்ய வேண்டும்" என்று கூறினார்.

 

அதேபோல் மாஸ்டர் எழுத்தாளர் ரத்ன குமார் "Vegetables, Groceries போன்ற Essentials விற்கும் கடைகளை மட்டுமே  திறக்க அனுமதியளித்த அரசு இப்போது Tasmac ஐ திறக்கிறது. அரசை குறை சொல்லும் மக்களை சாராய கடை முன் முண்டியடிக்க வைத்து இவர்களுக்கு இது தேவை தான் என நிரூபிக்க நினைக்கிறதா அரசு?" என்று கூறியிருந்தார்.

இப்படி பல தரப்பு மக்களும் பிரபலங்களும் கேள்வி எழுப்பியதை அடுத்து அரசு தனது முடிவை மாற்றியுள்ளது. இந்நிலையில் சென்னையில் வரும் 7-ம் தேதி டாஸ்மாக் திறக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தமிழ்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Entertainment sub editor