பிரபல நடிகைக்கு குழந்தை பிறந்தது.... மகிழ்ச்சியுடன் வெளியிட்ட போட்டோ... வாழ்த்தும் ரசிகர்கள்...!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல சின்னத்திரை நடிகை மான்சி சர்மா தற்போது அழகிய குழந்தைக்கு தாயாகியுள்ளார். இவர் புகழ்பெற்ற 'மகாபாரதம்' தொடரில் நடித்தவர். அதுமட்டும் இல்லாது சில பஞ்சாபி படங்களிலும், பல ஹிந்தி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர்.

நடிகை மான்சி பிரபல பாடகர் ஹன்ஸ் ராஜ் என்பவரின் மகனாகிய யுவராஜை திருமணம் செய்து கொண்டார். முதலில் காதலர்களாக இருந்த இவர்கள் பின்பு இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2019 பிப்ரவரி திருமணம் செய்தனர். இந்நிலையில் கணவர் யுவராஜ் தனது குழந்தை பற்றிய செய்தியை இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு அவர் "கவலைப்படாதே, நானும் அம்மாவும் கடைசி வரை உன் கையை பிடித்து வழிநடத்துவோம்" என்று தலைப்பிட்டுள்ளார். அந்த பதிவிற்கு கீழே ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Tags : Mansi sharma, Baby, Corona, Lockdown, Actress