RIP : கொரோனாவிற்கு அடுத்த பலி... பிரபல பாடகி மரணம் அடைந்தார் - துக்கத்தில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகின் பல பகுதிகளிலும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர்.

கொரோனாவிற்கு அடுத்த பலி பிரபல நடிகை மற்றும் பாடகி மரணம் அடைந்தார் popular actress and singer dies due to corona virus at the age of 80

இந்த கொடூர நோயினால் பல பிரபலங்களும், கலைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலரது இறப்பு செய்திகள் ரசிகர்களின் மனதை உலுக்கி விடுகிறது. அப்படி ஒரு செய்தி தான் இது. புகழ்பெற்ற நடிகை மற்றும் பாடகியான 'ரேனே கிளாட்' கொரோனா நோயினால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80. இவரது பல பாடல்கள் வெற்றி வாகை சூடின. உலகம் முழுவதும் இவருக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர்.

அவரது நண்பரும் மற்றோரு இசை கலைஞருமான செலின் டியான் இது பற்றி அறிவித்துள்ளார். அவர் கூறும்போது "மிகப் பெரிய பாடகி நம்மை பிரிந்துள்ளார். இத்தனை வருடங்களாக தனது மேஜிக்கல்  குரலால் நம்மை கட்டி போட்டவர். அவரது ஆத்துமா சாந்தி அடையட்டும். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்" என்று கூறியுள்ளார். இந்நிலையில் உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Entertainment sub editor