CORONA : பிரபல காமெடி நடிகர் திருமணம்... வெகு சிலர் மட்டுமே பங்கேற்பு... வாழ்த்தும் ரசிகர்கள்...!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஒரே வழி சமூக இடைவெளியை கடைபிடிப்பது தான் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் பல பிரபலங்களும் எளிமையான முறையில் திருமணம் செய்து வருகின்றனர். அந்த வகையில்தெலுங்கு சினிமாவின் இளம் காமெடி நடிகர் மகேஷ் அச்சண்டா இன்று திருமணம் செய்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'மகாநதி' படத்தில் நடித்திருக்கிறார். இவர் 2018-ஆம் ஆண்டு வெளியான, நடிகர் ராம்சரணின் 'ரங்கஸ்தலம்' படம் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ஒக்க க்ஷணம், டிஸ்கோ ராஜா போன்ற பல படங்களில் நடித்துள்ள அவர் தற்போது பவனி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
அவர்களது திருமணம் மணமகளின் சொந்த ஊரான கிழக்கு கோதாவரியில் எளிமையாக நடைபெற்றது. தம்பதிகளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இன்று காலை மேலும் ஒரு தெலுங்கு நடிகர் நிகில் சித்தார்த் திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.