நடிகர் வீட்டிற்கு முன் பரபரப்பு... உதவி கேட்டு கூடிய 20 பேர்... முதல்வருக்கு அவசர கோரிக்கை..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. இதனையடுத்து பல பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். அந்த வகையில் ஆரம்பம் முதலே பல உதவிகளை செய்து வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். தன்னை நாடி வருபவர்களுக்கு உதார குணத்துடன் உதவிகளை செய்து வரும் அந்த நடிகர், தற்போது ஒரு வீடியோவை பதிவிட்டு தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அதில் அவர் "இன்று காலை எனது வீட்டிற்கு முன்பு திடிரென்று 20 பேர் கூடி விட்டனர். அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்று எனக்கு தெரியாது பின்பு விசாரித்ததில் அவர்கள் விஜயவாடா, ராஜமந்திரி போன்ற இடங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் என்றும், தற்போது கொரோனா காரணமாக சரியான உணவு, இருப்பிடம் இல்லாமல் தவித்து வருவதாகவும், தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் கஷ்டப்படுவதாகவும் கூறுகின்றனர்".
"அவர்களுக்கு அடுத்த 15 நாட்களுக்குமான உணவு தேவையை நான் சந்திக்கிறேன். அரசாங்கத்திடம் என் கோரிக்கை என்னவென்றால் அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று சேர போக்குவரத்து உதவி செய்து கொடுக்க வேண்டும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதில் கவனம் செலுத்தி உதவி செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். இந்த செய்தி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.