Breaking : தளபதி விஜய் - விஜய் சேதுபதியின் மாஸ்டர் ரிலீஸ் - இந்த தேதிகளை குறி வைக்கிறதா ?
முகப்பு > சினிமா செய்திகள்ஊரடங்கு காரணமாக திரைப்பட பணிகள் , வெளியீடு என அனைத்தும் செயல்பாடுகளும் முடங்கியுள்ளது. இந்நிலையில் திரைப்பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் மே 11 ஆம் தேதி முதல் துவங்க தமிழக அரசு அனுமதி அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதனையடுத்து திரைப்படங்களின் டப்பிங், எடிட்டிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
குறிப்பாக மாஸ்டர் படத்தின் எடிட்டிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் திரையரங்குகள் திறக்கப்பட்டு நிலைமை சீரானதும் மாஸ்டர் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியா , சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் செப்டம்பர் அல்லது அக்டோபரில் தான் நிலைமை சீராகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மாஸ்டர் வெளியாகும் தேதிகள் குறித்து பிரத்யேகமாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி மாஸ்டர் திரைப்படம் விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி அல்லது தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 13 தேதி ஆகிய நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையில் மாஸ்டர் பட பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.