www.garudabazaar.com

TRENDING: ஜெயிலர் ஷூட்டிங்கில் இணைந்த தமன்னா.. அவரே வெளியிட்ட வைரல் Glimpse!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது.

Tamannaah Shared Jailer Nelson Shooting Spot Glimpse Video

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சந்திரமுகி- 2 படத்தில் இணைந்த பிரபல நடிகைகள்.. புகைப்படங்களுடன் வெளியான சூப்பர் அப்டேட்!

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தினை இயக்குகிறார். இந்த படத்தையும் அணணாத்த படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Tamannaah Shared Jailer Nelson Shooting Spot Glimpse Video

Images are subject to © copyright to their respective owners.

கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்நாளில் ஜெயிலர் படத்தின் குறு முன்னோட்டம் வெளியானது. முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், தமன்னா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

Tamannaah Shared Jailer Nelson Shooting Spot Glimpse Video

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  ஜெயிலர் படத்தின்  படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் நகரில் நடைபெற்றது.

Tamannaah Shared Jailer Nelson Shooting Spot Glimpse Video

Images are subject to © copyright to their respective owners.

ஜெயிலர் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மங்களூர் நகரில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய வீடியோ காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகின. மேலும் கன்னட சூப்பர் ஸ்டார் ஷிவ ராஜ்குமார் & சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் சந்தித்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வந்தன.

Tamannaah Shared Jailer Nelson Shooting Spot Glimpse Video

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகை தமன்னா, தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து இயக்குனர் நெல்சனின் Glimpse-யை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக வைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இதை பகிர்ந்துள்ளது.

Also Read | மகனுடன் சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஷாலினி அஜித்குமார்.. டிரெண்டாகும் வைரல் ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Tamannaah Shared Jailer Nelson Shooting Spot Glimpse Video

People looking for online information on Jailer, Jailer Shooting Spot, Nelson, Tamannaah Bhatia will find this news story useful.