www.garudabazaar.com

இசை அமைப்பாளர் தமனுடன் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில்.. பின்னணி என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவில் உள்ள பிரபல திரை உலகினர் கலந்து கொண்டு விளையாடும் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 

Chris Gayle with S Thaman for KCC pic gone viral

Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஏரியா மக்களுக்கு அப்பா செல்லபிள்ளையானது இப்படிதான் - மயில்சாமி மகன் உருக்கம்..

கோலிவுட், பாலிவுட், மோலிவுட், டோலிவுட் என இந்திய சினிமாவில் உள்ள திரை பிரபலங்கள் ஒவ்வொரு அணியாக இந்த தொடரில் பங்கேற்பார்கள். Celebrity Cricket League - CCL என்ற இந்த கிரிக்கெட் தொடரில், மொத்தம் 8 மாநிலங்களை சேர்ந்த அணிகள் ஆடி வருகிறது. மொத்தம் 19 போட்டிகள் ஆறு நகரங்களில் நடைபெற உள்ளது.

சென்னை ரைனோஸ் அணியின் கேப்டனாக நடிகர் ஜீவா உள்ளார். இந்த அணியில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ரமணா உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்களும் உள்ளனர்.

சர்வதேச மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களை போல, சினிமா நடிகர்கள் மோதும் இந்த CCL கிரிக்கெட் தொடர்களும் மிக விறுவிறுப்புடன் நடைபெறுவதால் ரசிகர்கள் இதனை உற்சாகத்துடனும் பார்த்து வருகின்றனர். இதில், பிரபல இசை அமைப்பாளர் தமன், தெலுங்கு வாரியர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். இவரது புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆகவும் செய்திருந்தது.

Chris Gayle with S Thaman for KCC pic gone viral

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரிக்கெட் வீரர் க்றிஸ் கெயிலுடன் தமன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

கன்னட சலன்சித்ரா கோப்பை தொடரின் 3 ஆவது சீசன், தற்போது ஆரம்பமாக உள்ள சூழலில், மொத்தம் 6 அணிகள் இந்த லீக் தொடரில் களமிறங்கும். இதில் முன்னாள் வீரர்கள் மற்றும் நடிகர்கள் உள்ளிட்டோர் ஆடுவார்கள். அந்த வகையில், க்றிஸ் கெயில், சுரேஷ் ரெய்னா, நடிகர்கள் சிவராஜ் குமார், துருவ சார்ஜா உள்ளிட்டோரும் ஆட உள்ளனர்.

இந்த நிலையில, கிரிக்கெட் வீரர் க்றிஸ் கெயிலுடன் தான் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இசையமைப்பாளர் தமன். கன்னட சலன்சித்ரா கோப்பை தொடருக்காக வந்த கிறிஸ் கெயிலுடன் புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார் தமன்.

Also Read | முதல்ல "வாடா, போடா".. கடைசில "சார்".. விவேக் - மயில்சாமி நட்பு நடுவுல இப்டி ஒரு உல்டாவா?!!..

தொடர்புடைய இணைப்புகள்

Chris Gayle with S Thaman for KCC pic gone viral

People looking for online information on Chris Gayle, Chris Gayle with S Thaman, S Thaman will find this news story useful.