www.garudabazaar.com

மகனுடன் சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஷாலினி அஜித்குமார்.. டிரெண்டாகும் வைரல் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித்குமார்.

Shalini Ajithkumar with her son aadhvik at ISL Football Match

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சந்திரமுகி- 2 படத்தில் இணைந்த பிரபல நடிகைகள்.. புகைப்படங்களுடன் வெளியான சூப்பர் அப்டேட்!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.

துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துணிவு படம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. உலக அளவிலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

Shalini Ajithkumar with her son aadhvik at ISL Football Match

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் நடிகர் அஜித்குமார் லண்டன் பயணத்தை முடித்து விட்டு போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்களை நடிகை ஷாலினி அஜித்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

Shalini Ajithkumar with her son aadhvik at ISL Football Match

Images are subject to © copyright to their respective owners.

போர்ச்சுக்கல் பயணத்தை முடித்து விட்டு நடிகர் அஜித்  ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள ஸ்காட்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஸ்காட்லாந்து நாட்டின் சாலைகளில் கார் ஓட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகின. 

Shalini Ajithkumar with her son aadhvik at ISL Football Match

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகர் அஜித் குமாரின் மனைவி நடிகை ஷாலினி அஜித்குமார் மற்றும் மகன் ஆத்விக் அஜித்குமார், சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் ISL கால்பந்து போட்டியை காண வந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. சென்னையின் FC & North East FC மோதும் இந்த போட்டியை காண சென்னை அணியின் சீருடை அணிந்து ஆத்விக் அஜித்குமார் வந்திருந்தார். இந்த புகைப்படத்தை சென்னை அணி தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Also Read | "சண்டைப் போட்டு அந்த பேரை வச்சோம்".. KPY சீசன் 4-ல் மனம் திறந்த விக்ரமன்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Shalini Ajithkumar with her son aadhvik at ISL Football Match

People looking for online information on ISL Football Match, Shalini, Shalini ajithkumar will find this news story useful.