www.garudabazaar.com

சந்திரமுகி- 2 படத்தில் இணைந்த பிரபல நடிகைகள்.. புகைப்படங்களுடன் வெளியான சூப்பர் அப்டேட்!  

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்திரமுகி-2 படத்தில் பிரபல நடிகைகள் இணைந்துள்ளனர்.

Srushti Dange Lakshmi Menon Chandramukhi 2 Movie

Also Read | "இந்தியாலதான் நான் சம்பாதிச்சேன்.. தொடர்ந்து படங்கள் FLOP .. அதனால".. பிரபல நாட்டின் குடியுரிமையை துறந்த அக்சஷ் குமார்..!

நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு மைசூரில் பூஜையுடன் துவங்கியது. '

இப்படத்தினை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி வாசு இயக்குகிறார்.

'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு & தோட்டா தரணி கலை இயக்குனர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சந்திரமுகி 2'  திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.

Srushti Dange Lakshmi Menon Chandramukhi 2 Movie

ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும்  சந்திரமுகி 2 படத்தில் நடிகை ராதிகா, நடிகர் வடிவேலு,நடிகர் ரவி மரியா, மனோபாலா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் பிரபல முன்னணி நடிகை கங்கனா ரனாவத் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

Srushti Dange Lakshmi Menon Chandramukhi 2 Movie

இந்த படத்தின் ஒரு பகுதி படப்பிடிப்பு தற்போது ஐதராபாத் நகரில் நடைபெற்று நிறைவடைந்தது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் நடிகை லெட்சுமி மேனன், ஸ்ருஸ்தி டாங்கே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Srushti Dange Lakshmi Menon Chandramukhi 2 Movie

இதன் மூலம் லெட்சுமி மேனன், ஸ்ருஸ்தி டாங்கே படத்தில் நடிப்பதை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளனர். ஏற்கனவே கங்கனா ரனாவத், மஹிமா நம்பியார் சந்திரமுகி-2 படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read | 1000 கோடி வசூல்.. பதான் படத்தின் டிக்கெட் விலையை குறைத்த தயாரிப்பாளர்! வைரல் அறிவிப்பு

தொடர்புடைய இணைப்புகள்

Srushti Dange Lakshmi Menon Chandramukhi 2 Movie

People looking for online information on Chandramukhi 2, Chandramukhi 2 Movie Update, Lakshmi menon, Srushti Dange will find this news story useful.