நடிகர் சூர்யா நடித்து வரும் ‘காப்பான்’ திரைப்படத்தின் பாடல் காட்சி ஷூட்டிங்கிற்காக படக்குழுவினர் இந்தோனேசியாவின் ஜாவா தீவில் முகாமிட்டுள்ளனர்.

‘அயன்’, ‘மாற்றான்’ திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘காப்பான்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயீஷா, போமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றை படமாக்க ‘காப்பான்’ படகுழு இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவிற்கு சென்றுள்ளது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குநர் கே.வி.ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கராவின் ‘சூரரைப்போற்று’ படத்தின் ஷூட்டிங்கிலும் நடிகர் சூர்யா நடித்து வருகிறார்.
#Kaappaan - Song shoot in Jawa island . @Suriya_offl @msprabhuDop @shobimaster @KiranDrk pic.twitter.com/tXMCtBkG65
— anand k v (@anavenkat) April 25, 2019