அடுத்தப்படம் யாருடன்? - சூர்யா 39 பற்றிய சூப்பர் அறிவிப்பு விரைவில்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘சூரரைப்போற்று’ திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

After Soorarai Pottru, Suriya 39 will be directed by Siva under Studio green Production

கார்த்தி நடிப்பில் வெளியான ‘சிறுத்தை’ படத்தை இயக்கிய சிவா, சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தல அஜித்துடன் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய சிவா, தற்போது தனது அடுத்தப்படத்தில் சூர்யாவை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

‘சிறுத்தை’ திரைப்படம் வெளியான போதே, சூர்யா-இயக்குநர் சிவா கூட்டணி அமையும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது  ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் இருவரும் கைக்கோர்க்கவுள்ளதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

செல்வராகவனின் ‘என்.ஜி.கே’, கே.வி.ஆனந்தின் ‘காப்பான்’ திரைப்படங்களின் பணிகளை முடித்துள்ள சூர்யா, தற்போது சுதா கொங்கராவின் ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘என்.ஜி.கே’,‘காப்பான்’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.