பிரபல பின்னணி பாடகிக்கு தென்னிந்திய டப்பிங் யூனியன் விதித்த தடைக்கான இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

கடந்த ஆண்டு திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பிய மீடூ இயக்கத்தில் பாடகி சின்மயி சில பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை முன்வைத்தார். இதையடுத்து, நடிகர் ராதாரவி தலைவராக இருந்த டப்பிங் யூனியனில் இருந்து பாடகி சின்மயி நீக்கப்பட்டார்.
டப்பிங் யூனியன் தனக்கு விதித்த தடையை எதிர்த்து பாடகி சின்மயி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சின்மயி மீது டப்பிங் யூனியன் விதித்த தடைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இதனால், சின்மயி டப்பிங் யூனியனில் எந்த இடையூறுமின்றி பணியாற்றலாம் என தெரிகிறது. இதனை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இனி தமிழ் படங்களில் பணியாற்ற தடையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
In normal parlance - I am legally allowed to work in Tamil films.
— Chinmayi Sripaada (@Chinmayi) April 24, 2019