ஜெட் வேகத்தில் ஜோதிகா- புதுப்படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது.

It is a Wrap for Jyothika's next with Suriya's 2D Entertainment Production

சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. ரேவதி, யோகி பாபு, மன்சூர் அலிகான், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஆனந்த் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. அந்த பாடலை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தின் பூஜை போட்டு 35 நாட்களிலேயே முழு படத்தின் ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளது. ஷூட்டிங் முடிவடைந்ததையொட்டி படக்குழுவினருடன் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படம் குறித்த அடுத்தக்கட்ட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் 11வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.