சிறுத்தையுடன் கைக்கோர்த்த சிங்கம் - விண்ணை முட்டும் எதிர்ப்பார்ப்பில் அன்பான ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘சூரரைப்போற்று’ திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Its Official, Suriya 39 will be directed by Siva after block buster hit Viswasam

கார்த்தி நடிப்பில் வெளியான ‘சிறுத்தை’ படத்தை இயக்கிய சிவா, சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.

தல அஜித்துடன் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய சிவா, தற்போது நடிகர் சூர்யாவை இயக்குகிறார். ‘சிறுத்தை’ திரைப்படம் வெளியான போதே, சூர்யா-இயக்குநர் சிவா கூட்டணி அமையும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது  ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் இருவரும் கைக்கோர்த்துள்ளனர்.

இந்த புதிய கூட்டணி சூர்யாவின் அன்பான மற்றும் தல அஜித்தின் ஆஸ்தான இயக்குநருமான சிவாவின் விஸ்வாசமான ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் குறித்த கூடுதல் தகவல் பின்னர் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

செல்வராகவனின் ‘என்.ஜி.கே’, கே.வி.ஆனந்தின் ‘காப்பான்’ திரைப்படங்களின் பணிகளை முடித்துள்ள சூர்யா, தற்போது சுதா கொங்கராவின் ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘என்.ஜி.கே’,‘காப்பான்’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.