பல்கேரியா சென்ற சூர்யாவின் ‘காப்பான்’ டீம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘காப்பான்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Boman Irani in Suriya's Kaappaan, final shooting is happeneing in bulgaria

‘அயன்’, ‘மாற்றான்’ திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘காப்பான்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயீஷா, போமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிக்காக பாலிவுட் நடிகர் போமன் இரானி உள்ளிட்ட படக்குழுவினர் 2 நாட்களுக்கு முன்பாகவே பல்கேரியா நாட்டிற்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கராவின் ‘சூரரைப்போற்று’ படத்தின் ஷூட்டிங் பணிகளையும் நடிகர் சூர்யா தொடங்கியுள்ளார்.