ராதா மோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடித்த 'காற்றின் மொழி' திரைப்படம் கடந்த வருடம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஜோதிகா பல்வேறு படங்களில் நடிக்கவிருப்பதாக அறிவிப்புகள் வெளியான வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் 'மனிதன்', 'என்றென்றும் புன்னகை' படங்களின் இயக்குநர் அஹமத்தின் உதவியாளர் ஃபெட்ரிக் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு '96' படப்புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் தமிழின் பிரபல இயக்குநர்களான பாரதிராஜா, பார்த்திபன், பாக்கியராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்களாம்.