ஜோதிகாவின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு நடிகர் சூர்யா சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார்.

Suriya pays a surprise visit to the sets of Jo-Kalyan's next

சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. ரேவதி, யோகி பாபு, மன்சூர் அலிகான், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஆனந்த் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அந்த ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு படத்தின் தயாரிப்பாளரும், ஜோதிகாவின் கணவருமான சூர்யா சர்ப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விரைவில் நிறைவடைந்து ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.