செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்துள்ள படம் 'என்ஜிகே'. இந்த படம் மே 31 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங், பாலா சிங், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை பிரவீன் கேஎல் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்ஆர் பிரபு எஸ்ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படம் வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி இந்தத் திரைப்படம் சென்னை சிட்டி பகுதிகளில் மட்டும் ரூ.1 கோடி வசூலைக் கடந்துள்ளதாம். மேலும் தமிழக அளவில் ரூ.9 வரை செய்துள்ளதாம்.