சென்னைக்கு விரைந்த சூப்பர் ஸ்டார்- என்ன காரணம்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ திரைப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

First Schedule of AR Murugadoss-Rajinikanth's Darbar shoot wrapped up

‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

மேலும், நிவேதா தாமஸ், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீக் பாபர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கி மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், முதற்கட்ட ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதையடுத்து, சிறிய இடைவெளியில் மும்பையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை திரும்பினார். ‘தர்பார்’ படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் இம்மாத இறுதியில் தொடங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.